அல்லாஹ் பெருந்தன்மையானவன், பெரியவன், மகத்துவமானவன், கம்ணியமானவன்...

 அல்லாஹ் பெருந்தன்மையானவன், பெரியவன், மகத்துவமானவன், கம்ணியமானவன்...

அல்லாஹ் பெருந்தன்மையானவன், பெரியவன், மகத்துவமானவன், கம்ணியமானவன்...

நிச்சியமாக அல்லாஹ் பெருந்தன்மையானவன், பெரியவன், மகத்துவமானவன், கண்ணியமானவன்

பெருந்தன்மை, பெறுமை, மகத்துவம், கண்ணியம் போன்ற பண்புகளின் மூலம் அவன் வர்ணிக்கப்பட்டுள்ளான். அவன் அனைத்தையும் விட பெரியவனாவான். மேலும் அனைத்தையும் விட சங்கையானவனும் உயர்ந்தவனுமாவான். அவனை பின்பற்றக்கூடியவர்களுடைய மற்றும் அவனுடைய நேசர்களுடைய உள்ளங்களிலும் அவனுக்கு மகத்துவமும் கண்ணியமும் உண்டு. அவர்களுடைய உள்ளங்கள் கண்ணியத்தாலும் மகத்துவத்தாலும் நிறைந்துள்ளது. அவனுக்கு அவர்கள் பணிந்து நடப்பார்கள் மேலும் அவனுடைய பெறுமைகளை சொல்லிக்காட்டுவார்கள்.

மகத்துவமானவனே! நீ தூய்மையானவன் உன்னுடைய மகத்துவம்தான் என்ன!!

{எனவே மகத்தான உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!} [ஸூரதுல் வாகிஆ 96]

நாங்கள் உன்னுடைய புகழையோ மகத்துவத்தையோ கணக்கிடவில்லை. பெரியவனே அழைக்கப்படக்கூடியவனே... மகத்துவத்திற்கும் கண்ணியத்திற்கும் உரியவனே

அல்லாஹ் அவனுடைய உயர்ந்த தன்மையில் மகத்துவமானவனாக இருக்கின்றான். அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகளிலும் அவன் மகத்துவமானவனாகவும் இருக்கின்றான். {அவனைப் போல் எதுவும் இல்லை.} [ஸூரா அஷ்ஷூரா 11]

யார் அவனுடைய பங்கிலிருந்து ஏதாவது ஒன்றை கலட்டுகின்றானோ அல்லாஹ் அதை விட்டும் கண்ணியத்திற்கும் மகத்துவத்திற்கும் உரியவன்.

அல்லாஹ் ஹதீஸூல் குத்ஸியிலே கூறுவதைப் போல

«பெறுமை என்னுடைய மேலாடை கௌரவம் என்னுடைய கீழாடை அவை இரண்டில் யாராவது ஒன்றை கலட்ட முயன்றால் அவரை நான் நரகத்தில் எரிந்து விடுவேன்.»
(ஆதாரம் அஹ்மத்)

நிச்சியமாக அல்லாஹ் உயர்ந்த புகழுக்குறியவனும் கண்ணியமானவனும் மகத்தானவனவனுமாகும்...



Tags: