அல்லாஹ்வுடைய அன்பை விளங்கிக் கொள்ளுதல்
அல்லாஹ்வுடைய அன்பு
அது உள்ளம் தூய்மையாகுதல் மேலும் அல்லாஹ்வின்பால் சாய்தல் அவன் நாடும் அனைத்திற்கும் பதிலளித்தல் அல்லாஹ்வுடைய ஞாபகத்தை உள்ளத்தில் ஏற்படுத்துதல் போன்றவையாகும்.
அல்லாஹ்வுடைய அன்பை உண்மைப் படுத்துதல்.
அல்லாஹ்வை அன்பு வைப்பது என்பது வணக்கத்தை அன்பு வைப்பதாகும் மேலும் அதை மகத்துவப்படுத்துவதும் கண்ணியப்படுத்துவதுமாகும். அதாவது அன்பை அல்லாஹ்வால் விரும்பப்படக்கூடிய விடயங்களின்பால் திருப்புவதும் மேலும் அதை மகத்துவப்படுத்துவதுமாகும். அது அல்லாஹ்வுடைய ஏவல்களை எடுத்து நடப்பதும் மேலும் அவன் தடுத்தவற்றை விலகி நடப்பதையும் வேண்டி நிற்கின்றது. இந்த இரக்கம்தான் ஈமானினதும் ஏகத்துவத்தினதும் அடிப்படையாகும். அதன் எல்லையை அடையாத சிறப்புக்களையும் இது உள்ளடக்கியுள்ளது. அல்லாஹ் விரும்புகின்றவையை இந்த இரக்கம் எடுத்துக் காட்டுகின்றது. அதாவது அல்லாஹ் விரும்புகின்ற இடங்கள், காலங்கள், மக்கள், செயல்கள், சொற்கள் மேலும் இவை அல்லாத இன்னும் அல்லாஹ் விரும்பக்கூடியவைகளும் உண்டு.
அதே போன்று அல்லாஹ்வுடனான இரக்கம் அது அல்லாஹ் ஒருவனுக்கான தூய்மையான இரக்கமாக இருப்பது கடமையாகும். அல்லாஹ்வுடனான இயற்கையான இரக்கம் ஒரு பிள்ளை தனது பெற்றோருக்கும், பெற்றோர் தனது பிள்ளைகளுக்கும், ஒரு மாணவன் தனது ஆசிரியருக்கும் காட்டும் இரக்கம் போன்றும் மேலும் சாப்பாடு, தண்ணீர், திருமணம், ஆடை, நண்பர்கள் இவை அல்லாதவைகளுக்கான இரக்கத்தைப் போன்றும் முறியக்கக்கூடாது.
ஹராமான இரக்கத்தைப் பொருத்தவரையில் அல்லாஹ்வுடைய இரக்கத்திலே அது இணைவைப்பை போன்றதாகும். உதாரணமாக இணைவைப்பாளர்கள் அவர்களுடைய சிலைகள் மீதும் மேலும் அவர்களுடைய நேசர்கள் மீதும் அல்லது அல்லாஹ்வை விரும்புவதற்கு எதிராக ஆழ்ந்த அன்பை கொண்டு வருதல் அல்லது அல்லாஹ் விரும்பாத இடங்களையும் காலங்களையும், மக்களையும், செயல்களையும், சொற்களையும் விரும்புதல் இதிலே பல படித்தரங்கள் உள்ளன.
அல்லாஹ் கூறுகின்றான் {அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள்.}[ஸூரதுல் பகாரா 165]
அல்லாஹ்வை நேசம் வைப்பதன் சிறப்பு
1 இதுதான் ஏகத்துவத்தின் அடிப்படையாகும் மேலும் அல்லாஹ் ஒருவன் மீது தூய்மையான அன்பு வைப்பது ஏகத்துவத்தின் உயிருமாகும். மாறாக அது உண்மையான வணக்கமாகும். ஒரு அடியான் அவனுடைய இறைவனை பூரணமான அன்பு வைக்கும் வரைக்கும் அவனுடைய ஏகத்துவம் பூர்த்தியடையாது. அனைத்து அன்புகளும் மிகைத்து முந்திவிடும் மேலும் அதன் மீது சட்டங்களை ஆக்கியுள்ளான். ஏனென்றால் ஒரு அடியானுடைய அன்பு இயற்கையாகவே ஆகிவிடுகின்றது. இந்த அன்புதான் ஒரு அடியானுடைய சந்தோசமும் வெற்றியுமாகும்.
2 கஷ்டமான நேரத்திலே இந்த அன்பு சீராகி விடுகின்றது. மேலும் கஷ்டம் கவலைகள் ஏற்படும் நேரத்தில் அவ்வாரான அன்பு அவனுக்கு சுகத்தை அளிக்கின்றது.
அல்லாஹ்வும் அன்பு பயம் ஆதரவு போன்றவற்றாலே வணங்கப்படுகிறான். அல்லாஹ்வின்பாலும் அவனை சந்திப்பதின்பாலும் ஆசை வைத்தலும் உலக ஆசையை போக்கி உள்ளத்திற்கு ஒரு ஆறுதலைத் தருகின்றது.3 பூர்த்தியான அருட்கொடையும் உச்ச சந்தோசமும்- அல்லாஹ்வுடைய அன்பினாலே ஏற்படும். உள்ளத்திற்கு அதிகமான தேவை ஏற்படுவதும் தனிமையை போக்கிக் கொள்வதும் பசியை நிவர்த்தி செய்து கொள்ளுதல் போன்ற அனைத்தும் அல்லாஹ்வின் மீது கொண்டுள்ள அன்பினால் நிறைவேறி விடும். மனிதன் உலகத்தில் எவ்வளவு இன்பங்களையும் அமைதிகளையும் அடைந்து கொண்டாலும் அது அல்லாஹ்வின் அன்பு இல்லாமல் பூர்த்தி அடையாது. ஏனென்றால் அல்லாஹ்வின் மீது அன்பு கொள்வதானது உள்ளங்களுக்கு கிடைத்த பெரும் அருட்கொடையாகும். சிறந்த ஆன்மாவுக்கும் தூய்மையான புத்திக்கும் அல்லாஹ்வின் மீது அன்பு கொள்வதைத் தவிர வேறு எந்த சந்தோசமோ தூய்மையோ இன்பமோ சிறப்போ கிடையாது. ஒரு முஃமின்தான் தனது உள்ளத்தில் அனைத்து இனிமைகளையும் இன்பங்களையும் அடைந்து கொள்கின்றான். இதன் மூலமே அவன் உலகில் உள்ள அனைத்து அருட்கொடைகளையும் அனுபவிக்கின்றான். அவன் அடைந்து கொள்ள்ளக்கூடிய பேரின்பங்கள் பெரிதோ பெரிது.
«'எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது'».(ஆதாரம் புகாரி முஸ்லிம் நஸாஇ)
அல்லாஹ்வைக் கொண்டு யார் அமைதி நிம்மதி போன்றவற்றை பெறவில்லையோ அவரை விட மூதேவி வேறு எவரும் கிடையாது.
அல்லாஹ்வுடைய அன்புக்கு இழுக்கும் காரணங்கள்
எங்களுடைய இறைவன் அல்லாஹ் அவனை விரும்புபவர்களையும் அவனை நெருங்குபவர்களையும் அவன் விரும்புவான். அல்லாஹ்வை விரும்புவதற்கு இழுக்கும் முதலாவது காரணம் படைப்பினங்களில் ஒருவரும் விரும்பாத அளவிற்கு அவனுடைய இறட்சகனை ஒரு அடியான் விரும்புவதாகும். அல்லாஹ்வை விரும்புவதற்கு இழுக்கும் காரணங்களை கீழே தருகிறோம்-
1 குர்ஆனை பிரதிபலிப்புடனும் விருப்பத்துடனும் மேலும் அதனுடைய கருத்தை விளங்கியவனாகவும் ஓதுதல். யார் அல்லாஹ்வுடைய வேதத்தைக் கொண்டு அமல் செய்து ஈடுபடுகிறாரோ அவருடைய உள்ளம் அல்லாஹ்வின்பால் திருப்பப்படுகிறது.
2 கடமையானதை செய்து விட்டு சுன்னத்தானதை செய்வதன் மூலம் அல்லாஹ்வை நெருங்குதல். «அல்லாஹ் கூறினான்:
எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.» (ஆதாரம் ஹதீஸுல் குத்ஸி புகாரி).
{அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்.}.3 அனைத்து நிலமைகளிலும் தொடர்ந்தும் அல்லாஹ்வை நாவாலும் உள்ளத்தாலும் செயலாலும் நினைவுபடுத்துதல்.
4 ஒருவனுடைய உள இச்சைகளையும் ஆசைகளையும் விரும்புவதை விட அல்லாஹ்வை விரும்புவதை முற்படுத்த வேண்டும்.
5 உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளும் இருக்க வேண்டும். மேலும் அதை படிப்பதிலும் ஆர்வம் இருக்க வேண்டும்.
6 நீதி கருனை ஆசிர்வாதம் ஆகியவற்றைக் பார்த்தல். மேலும் அவனுடைய வெளிரங்கமான மறைமுகமான அருட்கொடைகளையும் பார்த்தல்.
7 அல்லாஹ்வுக்கும் அவனுக்கும் மத்தியில் உள்ளம் முழுமையாக பிரிந்துவிடுதல்.
8 எங்களுடைய இறைவன் அடி வானத்திற்கு இறங்கும் நேரமான இரவின் 1\3 பகுதியில் அல்லாஹ்வை தனிமையில் வணங்குதல். அல்லாஹ்விடத்தில் கேட்டல் அவனுடைய குர்ஆனை ஓதுதல் முறையான விதத்தில் அவனை நின்று வணங்கி கடைசியாக அவனிடத்தில் பாவ மன்னிப்புத் தேடுதல்.
9 அல்லாஹ்வை உண்மையாக விரும்பக்கூடியவர்களின் சபையில் அமர்ந்து சுவையான பழத்தை தேர்ந்தெடுப்பது போன்று அவர்களுடமிருந்து பிரயோசனமான பேச்சுக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறந்த பேச்சுக்களை எடுத்துக் கொண்டாலே தவிர வேறு ஒன்றும் பேசக் கூடாது அதிலே காலத்தை அதிகரித்து வேறு பிரயோசனங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தெளிவாகின்றது.
10 அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியானின் உள்ளத்திற்கும் இடையில் பிரிக்கும் அனைத்து காரணங்களையும் தூரமாக்கிவிடும்.
அல்லாஹ் அடியானின் மீது இரக்கம் வைப்பதன் பிரயோசனம்-
யாரின் மீது அல்லாஹ் இரக்கம் வைக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டி மேலும் அவனை நெருங்குகின்றான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
«உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:
என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்.».(ஆதாரம் புகாரி)
ஒரு அடியான் தனது இறைவனைப் பயப்படும் போதெல்லாம் அவன் இன்னொரு நேர்வழியின்பால் உயர்த்தப்படுகிறான். மேலும் அல்லாஹ் அவனை விரும்பும் போதெல்லாம் அவனுடைய நேர்வழி அதிகரிக்கின்றது. மேலும் அவன் நேர்வழிபெறும் போது அவனுடைய பயபக்தி அதிகரிக்கின்றது.
யாரை அல்லாஹ்விரும்புகிறானோ அவன் பூமியில் ஏற்றுக் கொள்ளப்பட்டவனாக ஆகின்றான்.
இந்த அடியான் ஏற்றுக் கொள்ளப்படுகிறான் என்பதற்கான கருத்து அவனுடைய இறட்சகன் அவனை விரும்பி அவன்பால் சாய்கின்றான். மேலும் அவனைப் பொருந்திக் கொண்டு அவனை புகழ்கின்றான். அவன் நிராகரித்தவனைத் தவிர அனைத்தையும் விரும்புவான். ஏனென்றால் நிராகரித்தவன் அல்லாஹ்வை விரும்புவதை மறுத்தவனாவான். எவ்வாறு அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு உள்ளானவர்களாக ஆக முடியும்
ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்..
«அல்லாஹ் ஒரு அடியானை விரும்பினால் ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து நான் இந்த அடியானை விரும்புகிறேன் நீங்களும் அவனை விரும்புங்கள் என்று கூறுவான். ஜிப்ரீல் (அலை) அவர்களும் அவரை விரும்புவார்கள் பின்பு ஜிப்ரீல் அலை அவர்கள் வானத்தில் உள்ள அனைவரையும் கூப்பிட்டு அல்லாஹ் இந்த அடியானை விரும்புகிறான் நீங்களும் அவனை விரும்புங்கள் என்று கூறுவார். பின்னர் வானத்தில் உள்ள அனைவரும் அந்த அடியானை விரும்புவார்கள் பின்பு அவருக்கு பூமியிலும் விரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.».(ஆதாரம் முஸ்லிம்)
இதே போன்றுதான் அல்லாஹ் ஒரு அடியானை விரும்பினால் அவனை கண்கானிப்பதையும் வழிநடத்துவதையும் ஏற்றுக் கொள்கின்றான். மேலும் அனைத்து கஷ்டங்களிலும் அவனை சந்தோசப்படுத்துகின்றான். தூரமான அனைத்தையும் நெருங்கச் செய்கின்றான். அவனுடைய உலக விடயங்களை இலகுபடுத்துகின்றான். அவன் எந்த ஒரு களைப்பையும் உணரமாட்டான்.
அல்லாஹ் கூறுகின்றான்- {நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரிடம் அளவற்ற அருளாளன் அன்பு செலுத்துவான்.}.[ஸூரது மர்யம் 96]
யாரை அல்லாஹ் விரும்புகின்றானோ அவனை அல்லாஹ் அவனது பாதுகாப்பிலே வைப்பான்- அல்லாஹ் யாரை விரும்புவானோ அவனை வழிநடத்துவதையும் கண்கானிப்பதையும் தன்னுடையதாக ஆக்கிக் கொள்ளுவான். அவனை நோவினை செய்யவோ தீங்கிளைக்கவோ யாருக்கும் இடமளிக்கமாட்டான். ஹதீஸூல் குத்ஸியில் வந்துள்ளது.
ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் «அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.» (ஆதாரம் புகாரி)
உண்மையான ஈமான் ஆத்மாக்களின் ஒரு உயிராகவும் வெற்றியின் மைதானமாகவும் உள்ளது. மேலும் அல்லாஹ்வைக் கொண்டு இணை வைப்பது அவருடைய மரணத்திற்கு முன்பு ஒரு மரணமாகும் மேலும் கவலையின் மைதானமாகவும் உள்ளது.யார் அல்லாஹ்வை விரும்புகின்றானோ அவனுடைய துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். அல்லாஹ் அவனுடைய அடியார்களாகிய முஃமீன்களை விரும்புவதினால் அவர்களுடைய துஆவை ஏற்றுக் கொள்வதற்கான அதிகமான ஆதாரங்கள் உள்ளன. அவர்களுடைய கைகளை வானத்தின் பக்கம் உயர்த்தி எனது இறைவா என்று கூறினால் அல்லாஹ் அவர்களுக்கு அவனுடைய கொடைகளை வழங்குகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான் {என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில்இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!)}.[ஸூரதுல் பகரா 186]
சல்மான் பாரிஸி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் அல்லாஹ்வுடைய தூதர் கூரினார் «அல்லாஹ் கூச்ச சுபாவம் உள்ளவன் ஒரு அடியான் அல்லாஹ்விடம் இரு கரமேந்தி வேண்டினால் அல்லாஹ் ஒன்றும் கொடுக்காமல் திருப்பி அனுப்ப வெக்கப்படுகின்றான்.».(ஆதாரம் திர்மதி)
அல்லாஹ் ஒரு அடியானை விரும்பினால் என்றால் மலக்குமார்கள் அவருக்காக அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பு தேடுவார்கள். அதாவது அல்லாஹ் விரும்பிய அடியானுக்காக பாவ மன்னிப்பு தேடுவார்கள்.
{அர்ஷைச் சுமப்போரும், அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர். "எங்கள் இறைவா! ஒவ்வொரு பொருளையும் அருளாலும், அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய். எனவே மன்னிப்புக் கேட்டு, உனது பாதையைப் பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாயாக!'' என்று நம்பிக்கை கொண்டோருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றனர்.}.
[ஸூரதுல் கா-ஃபிர் 7]
அல்லாஹ் மேலும் கூறுகின்றான் {(மனிதர்களின் பாவத்தால்) வானங்கள் அவற்றின் மேற்புறத்திலிருந்து பிளந்து விட முயலும். வானவர்கள் தமது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, பூமியில் உள்ளவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவார்கள். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வே மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.}.[ஸூரது ஷூரா 5]
அல்லாஹ் ஒரு அடியானை விரும்பினால் அவனை நல்லமல்களின் பக்கம் இழுப்பான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «அல்லாஹ் ஒரு அடியானுக்கு நல்லதை நாடினால் அதை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றான். நபியவர்களிடம் அது எப்படி என்று கேட்கப்பட்டது நபியவர்கள் சொன்னார்கள் அவர் மரணிப்பதற்கு முன்பு அல்லாஹ் அவருக்கு நிறைய அமல்கள் செய்வதற்கு வழியை திறக்கின்றான் பின்பு அவரை அவ்வாரே நன்மையை அவரிடம் இருந்து எடுத்துக் கொள்கின்றான்.».(ஆதாரம் அஹ்மத்).
அல்லாஹ் ஒரு அடியானை விரும்பினால் அவனை மௌத்துடைய நேரத்தில் பாதுகாப்பான்.
அல்லாஹ் ஒரு அடியானை விரும்பினால் அவனை உலகத்திலே பாதுகாப்பான். மேலும் மௌத்துடைய நேரத்தில் அவருக்கு பாதுகாப்பையும் உறுதியையும் வழங்குவான். அவருடைய உயிரை இலகுவான முறையில் எடுப்பதற்கு சில மலக்குமார்களை அனுப்புவான். மௌத்தில் அவரை உறுதியாக வைப்பான். மேலும் அவருக்கு சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் கூறுவான்.
அல்லாஹ் கூறுகின்றான் {"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி "அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் குறித்து மகிழ்ச்சியடையுங்கள்!'' எனக் கூறுவார்கள்.}
.[ஸூரதுல் புஸ்ஸிலத் 30].
அல்லாஹ் ஒரு அடியானை விரும்பினால் அவனை அல்லாஹ் சுவர்க்கத்தில் நிரந்தரமாக வைப்பான்.
யாரை அல்லாஹ் விரும்புகிறானோ அவனை மறுமையில் சுவர்க்கவாசியாக ஆக்குவான். அல்லாஹ் அவன் விரும்பிய அடியானை மறுமையில் கண்ணியப்படுத்துவான். மேலும் ஒருவராலும் அவருக்கு தீங்கு ஏற்படாது. அல்லாஹ் அவன் விரும்பும் அடியார்களுக்கு சுவர்க்கத்தில் அவனது ஆசைகளை நிரைவேற்றிக் கொடுப்பதாக வாக்களிக்கின்றான்.
ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஹதீஸூல் குத்ஸியில் வந்திருப்பது
«அல்லாஹ் கூறுகிறான்:எனது நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த உள்ளத்தாலும் நினைத்துப் பார்த்திராத ஒன்றை ஏற்பாடு செய்துள்ளேன். நீங்கள் நாடினால் வாசியுங்கள்».{அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது}. [அல்குர்ன்:17].
இவ்வுலகம் அல்லாஹ்வை அன்பு கொள்ளுவதாலும் அவனை வணங்குவதனாலும் சிறப்புற்றுக் காணப்படுகின்றது. அவ்வாறு அல்லாஹ்வைப் பார்ப்பதனாலும் வெற்றுக் கண்களால் காண்பதனாலும் சுவர்க்கம் சிறப்புருகின்றது.அல்லாஹ்வுடைய இரக்கத்தினால் கிடைக்கும் பிரதிபலன் அல்லாஹ்வைக் காணக் கிடைப்பதாகும்.
அல்லாஹ் அவன் விரும்பும் அடியார்களின் முன்னால் ஒளியைப் போன்று தோன்றுவான். அவர்கள் அதை விட விருப்பத்திற்குறிய ஒன்றை பார்த்திருக்கமாட்டார்கள் ரஸூல் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகின்றது. அவர்கள் இரவில் பூரண சந்திரனைப் பார்ப்பது போன்று அல்லாஹ்வை அவர்கள் பார்ப்பார்கள். அதாவது பூரண சந்திரனைப் போல காண்பார்கள். «நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (அந்த) பெளர்ணமி இரவில் அவர்கள் முழுநிலாவைக் கூர்ந்து பார்த்தார்கள். 'இந்த நிலாவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதைப் போன்றே உங்களுடைய இறைவனையும் (மறுமையில்) காண்பீர்கள். எனவே, சூரியன் உதயமாவதற்கு முன்புள்ள தொழுகையிலும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள தொழுகையிலும் (உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் முடியும் என்றால் அவ்வாறே செய்யுங்கள் (உங்களுடைய இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)' என்றார்கள்.» (ஆதாரம் புகாரி).
{சூரியன் உதிப்பதற்கு முன்பும், மறைவதற்கு முன்பும் உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக!}. [அல்குர்ஆன்:39]
அன்பு வைப்பதின் சட்டங்களும் எச்சரிக்கைகளும்
அடியானுக்கு அல்லாஹ்வுடைய அன்பு சோதனையை விட்டும் தடுக்காது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «நிச்சியமாக கண்ணியமான சோதனையுடன் கண்ணியமான கூலியும் உண்டு. மேலும் அல்லாஹ் ஒரு கூட்டத்தை விரும்பினால் அவர்களை சோதிப்பான். யார் அதைப் பொருந்திக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் பொருத்தம் உண்டு மேலும் யார் அதில் கோவப்படுகிராறோ அவர் அல்லாஹ்வின் கோவத்தை அடைந்து கொள்வார்.».
(தாரம் திர்மfதி)
அல்லாஹ் அவனுடைய அடியானை பலதரப்பட்ட சோதனைகள் மூலம் சோதிப்பான். பாவங்களை அவனிடமிருந்து பிரிப்பதற்கும் மேலும் அவனுடாய உள்ளத்தை உலக ஆசைகளை விட்டு நீக்குவதற்குமாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் {உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையும் அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம் உங்கள் செய்திகளையும் சோதிப்போம்.}.
[ஸூரது முஹம்மத் 31]
அல்லாஹ் மேலும் கூறுகின்றான் {ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம் பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள் அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்..}.
[ஸூரதுல் பகரா 155-157]
2 ஒரு அடியான் அவனுசைய இறட்சகனுக்கு பாவம் செய்வது அவனுடைய இரக்கத்தை குறைத்து விடும் மேலும் அதன் பூரணத்துவத்தையும் நீக்கிவிடும். அன்பு என்பது ஈமானைப் போன்றதாகும் அதற்கென ஒரு அடிப்படையும் பூரணத்துவமும் உண்டு. யார் ஒரு மனிதன் சந்தேகத்திலும் பெரிய நயவஞ்சகத்திலும் நுளைந்தாள் அவனிடமிருந்து அடிப்படை கலண்டு இல்லாநலி போய் விடும். யாருடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய இரக்கம் இல்லையோ அவன் மதம் மாறிய நிராகரிப்பவனும் மேலும் பெரிய நயவஞ்சகத்தனம் செய்த நயவஞ்தகனும் ஆவான். அவனுக்கு மாரக்கத்தில் எந்தப் பண்பும் இல்லையாகும். மாறு செய்தவனை பொருத்த வரையில் அவனுக்கு அல்லாஹ்வுடைய அன்பை சுமக்கின்றான் என்று கூற முடியாது. மாறாக அவன் அல்லாஹ்வுடாய அன்பை குறைவாக சுமப்பவன் என்றே சொல்ல வேண்டும்.
«நீங்கள் தவறு செய்தாலும் அல்லாஹ் இன்னொறு சமூகத்தைப் படைப்பான் அவர்கழும் தவறு செய்வார்கள் அவர்களை அல்லாஹ் மன்னிப்பான்.».(ஆதாரம் அஹ்மத்).
சுதந்திரம் என்பது உள்ளத்தினால் செய்யக்கூடிய இணை வைப்பு ஆசைகள் சந்தேகங்கள் இவை அனைத்தையும் உள்ளடக்கியதாகும். உளஅளம் அடிமைப்படுகின்றது ஆனால் அது அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் முடியாது.3 அல்லாஹ்வுடைய அன்பு அடியார்களுடைய இயற்கையான அன்பை குறைத்து விடாது. ஆத்மாக்கள் சாயக்கூடிய சாப்பிடுவது, குடிப்பது, பெண்கள். போன்றவையும் இவை அல்லாதவைகளும் ஆகும் «நீ உலகத்தில் பெண்னையும் நலவுகலையும் விரும்பு». (ஆதாரம் அஹ்மத்).
இணை வைப்பு அல்லாமல் சில பொருட்கள் மீது உலகத்தில் அன்பு வைக்கலாம். ஏனென்றால் நபி ஸல் அவர்கள் அன்பு வைத்தார்கள். ஹராமாக்கப்பட்டதைத் தவிர உலகத்தில் தொடர்ந்தும் ஒரு மனிதனுக்கு விருப்பம் வைப்பதை அல்லாஹ் ஆகுமாக்கி உள்ளான்.
4 யார் ஒருவன் அல்லாஹ் விரும்புவதைப் போன்று விரும்பினான் என்றால் அவன் நிராகரித்தவன் ஆவான்.
அல்லாஹ் கூறுகின்றான்{ அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும்போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.}.
[ஸூரதுல் பகரா 165]
இந்த வசனத்தில் வணக்கத்திலும் அவனை கண்னியப்படுத்துவதிலும் அவனுடைய இரக்கத்திற்கு ஈடாக யார் அவருடைய இரக்கத்தை ஆக்கிக் கொள்கின்றாரோ அவரை கடுமையாக எச்சரித்து வந்துள்ளது.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வுக்கு விருப்பமான அமல்களில் நின்றும் உள்ளதுதான் அல்லாஹ்வின் விடயத்தில் அன்பு வைப்பதும் மேலும் அவனுடைய விடயத்தில் கோவம் வைப்பதுமாகும். ஆதாரம் அஹ்மத் (ஆதாரம் அஹ்மத்).அல்லாஹ் கூறுகின்றான்
{"உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் நட்டத்தை அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்!}.
[ஸூரதுத் தவ்பா 24]
இந்த வசனத்தில் அல்லாஹ்வை விரும்புவதை விட்டும் இந்த எட்டு வர்ணனைகளும் யாரிடம் காணப்படுகின்றதோ அவனை கடுமையாக எச்சரிக்கின்றது,
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள் நபியவர்கள் கூறியதாக «உங்கள் பெற்றோர்களையும் குழந்தைகளையும் அனைத்து மனிதர்களையும் விட நான் உங்களுக்கு விருப்பத்திற்குறியவனாகும் வரைக்கும் நீங்கள் பூரணமான முஃமீனாக ஆக மாட்டீர்கள்.». (ஆதாரம் இப்னு மாஜா).
5 அல்லாஹ்வுடைய இரக்கத்தை புறக்கனித்து முஃமீன்களை விட நிராகரித்தவர்களை அதிகமாக விரும்புதல்- இணை வைப்பாளர்களின் இணை வைப்பிற்கும் அவர்களுடைய மார்க்கத்திற்கும் அன்பு வைப்பது. அல்லாஹ்வுடைய விடயத்தில் விரும்புவதும் அல்லாஹ்வுடைய விடயத்தில் கோவப்படுவதும் ஈமானின் அடிப்படையில் நின்றும் உள்ளதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்
{நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏகஇறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது.அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை.}.[ஸூரது ஆலு இம்ரான் 28]
நிராகரிப்பாளர்களை நேசர்களாக எடுத்துக் கொள்வதை அல்லாஹ் முஃமீன்களுக்கு தடுத்துள்ளான். மேலும் இவ்வாறு யார் செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதை உறுதியாக கூறியுள்ளான். அல்லாஹ்வுடன் நேசம் வைப்பதும் எதரிகளுடன் நேசம் வைப்பதும் முரண்படக்கூடிய இரு அம்சங்கனாகும். {அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர.}.
[ஸுரது ஆலு இம்ரான் 28]
அல்லாஹ் அவர்களுடன் நேசம் வைப்பதற்கு ஒரு சலுகையை வழங்குகின்றான். அல்லாஹ்வுக்கு அவர்கள் பயந்தால் அவளுக்கு நேசம் வைத்ததின் காரணமாகவே அவருடைய வாழ்க்கையை சீர் செய்து விடுவான் அந்த நேரத்தில் அவர்களுடன் வெளிப்படையாகவே வாழ்வது கூடும். ஈமான் கொள்வதினாலும் நிராகரிப்பவர்களை வெருப்பதனாலும் உள்ளம் அமைதியடைகின்றது. {மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர்}.
[ஸூரதுன் நஹ்ல் 106]
அன்பின் பிரகாசம்
அல்லாஹ்வை சந்திப்பதற்கு உலக வாழ்க்கைக்கும் இடையிலும் எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் நலவை ஆக்கியுள்ளார்கள். அவர் கூறினார் «மாறாக உயர்ந்த தோழனாவான்»(ஆதாரம் அஹ்மத்)
உலக ஆசைகள் அதன் சுகங்கள் மேலும் அதன் பொருட்களை விரும்புவதை விடவும் அல்லாஹ்வுடைய நேசத்தையும் அல்லாஹ்வை சந்திப்பதையும் அவனை கண்ணியப்படுத்துவதையும் நபி (ஸல்) அவர்கள் தேரந்தெடுத்துள்ளார்கள்.
அல்லாஹ்வை அன்பு வைப்பதன் அடையாளம் அவனை அதிகமாக ஞாபகம் செய்வதாகும். மேலும் அவனை சந்திப்பதில் ஆசை வைப்பதுமாகும். யார் ஒரு விடயத்தை விரும்புகின்றாரோ அவர் அதை அதிகமாக ஞாபகம் செய்வார் மேலும் அவர் அதை சந்திக்கவும் விரும்புவார்.அர்ரபீஃ இப்னு அனஸ்