அ- அவன் அல்லாஹ்
அல்லாஹ் அன்பாளன் மற்றும் அருளாளன்...
நிச்சியமாக அவன் அல்லாஹ் அன்பாளன் மற்றும் அருளாளன்...
அவனின் மீது அருளை எழுதிக் கொண்டான் மேலும் அருளை கோபத்திற்கு முற்படுத்தியுள்ளான். மேலும் அவனுடைய அருளை விசாலமாக்கினான்.
{அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது}
[ஸூரதுல் அஃராப் 56]
அல்லாஹ் எங்களுடைய தாயை விடவும் மிகவும் இரக்கமானவன் ஒரு குழந்தைக்கு பாலுட்டும் ஒரு பெண்ணை சுட்டிக்காட்டி நபியவர்கள் கூறினார்கள்
இவள் தன்னுடைய குழந்தையை நெருப்பில் வீசிவிடுவாள் என்பது சமபந்தமாக நீங்கள் என்ன கருதுகுரீர்கள் என்று கேட்டார்கள் அதற்கு நாங்கள் கூறினோம் இல்லை அவள் வீசமாட்டாள் நபியவர்கள் கூறினார்கள் அந்தக் குழந்தைக்கு தாய் காட்டும் இரக்கத்தை விட அல்லாஹ் மிகவும் இரக்கமானவன் என்று கூறினார்கள்«இவள் தனது குழந்தையை நெருப்பில் வீசுவது பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்.? என நபியவர்கள் கேட்க, இல்லை. அவள் ஒரு போதும் வீசமாட்டாள் என்றோம். இத்தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பை விட அல்லாஹ் தன் அடியார்கள் மீது அதிக இரக்கமுடையவன்» (ஆதாரம் புகாரி)
அருளாளன், அன்புடையோன், நண்மை செய்பவன், சங்கையானவன், கொடை கொடுப்பவன், கொடுப்பவன் இந்த பெயர்கள் அதனுடைய கருத்துக்களை நெருங்குகின்றது. இவை அனைத்தும் இறைவனுடைய அருள், நலவு, கொடை, சங்கை போன்ற பண்புகளை அறிவிக்கின்றது. மேலும் அனைத்து படைப்பினங்களுக்கும் பொதுவான அருளை இது அறிவிக்கின்றது. அவனுடைய நுட்பத்திற்கு ஏற்ப வேண்டப்படுகின்றது. விசுவாசம் கொண்டவர்களுக்கு இதில் ஒரு பெரிய பங்கை குறிப்பாக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் {எனது அருள், எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறது. (என்னை) அஞ்சி,நடப்பவர்களுக்கு அதைப் பதிவு செய்வேன்'' என்று (இறைவன்) கூறினான்.}. [ஸூரதுல் அஃராப் 156] மேலும் அவனுடைய கொடையும் உபகாரமும் அவனது அருளின் தாக்கமாக உள்ளது. மேலும் இம்மை மறுமையினுடைய நலவுகள் அனைத்தும் அவனுடைய அருளின் தாக்கத்தில் இருந்தும் உள்ளது.அவன் அருளாளன் அன்புடையோன்...
அனைத்து படைப்பினங்களுக்கும் அவன் இரக்கம் காட்டுகின்றான் மேலும் அவன் விசுவாசம் கொண்ட அடியார்களுக்கு அவனுடைய அருளை குறிப்பாக்கியுள்ளான்.
{அவன் நம்பிக்கை கொண்டோரிடம் நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.}.[ஸூரதுல் அஹ்ஸாப் 43]
அவன் இரக்கமுள்ளவன்...
அவனுடைய அருளில் இருந்தும் உள்ளதுதான் உலகத்திற்கு முஹம்மத் (ஸல்) அவர்களை நேர்வழி காட்டுவதற்காகவும் மேலும் உலக மற்றும் மார்க்க விடயங்களை சீர்ப்படுத்துவதற்காகவும் அனுப்பியதாகும்.
அவன் இரக்கமுள்ளவன்...
அவனைத் தவிர வேறு யாரும் அவனுடைய அருளை பிடித்துக் கொள்ள முடியாது. மேலும் அவனைத் தவிர வேறு யாரும் அதை செலுத்தவும் முடியாது.
{மனிதர்களுக்காக அல்லாஹ் திறந்து விட்ட எந்த அருளையும் தடுப்பவன் எவனும் இல்லை. அவன் தடுத்ததை அதற்குப் பின் அனுப்புபவனும் இல்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.}. [ஸூரது ஃபாதிர் 2]
நிச்சியமாக அவன் அல்லாஹ் அவனே அருளாளனும் அன்புடையோனுமாவான்.