அல்லாஹ் உணவளிப்பவன்....

 அல்லாஹ் உணவளிப்பவன்....

அல்லாஹ் உணவளிப்பவன்....

நிச்சியமாக அல்லாஹ் உணவளிப்பவன்....

{அல்லாஹ்வே செல்வம் அளிப்பவன்உறுதியானவன்; ஆற்றல் உடையவன்.}. [ஸூரது அத்தாரியாத் 58]

உணவளிப்பவன்....

அடியார்களது உணவு அல்லாஹ்வின் கையிலே உள்ளது. அல்லாஹ் அவன் நாடியவர்களுக்கு அவனுடைய வாழ்வாதாரத்தை விரித்துக் கொடுக்கின்றான். மேலும் வானங்களினதும் பூமியினதும் ஆட்சியும் விடயங்களை நிர்ணயிப்பதும் அவனுடைய கையிலே உள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான்

{பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும்அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான்.}. [ஸூரது ஹூத் 6]

அல்லாஹ் மேலும் கூறுகின்றான்

{எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான்வன் செவியுறுபவன்அறிந்தவன்.}. [ஸூரதுல் அன்கபூத் 60]

அல்லாஹ் மேலும் கூறுகின்றான்

{தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.}.[ஸூரதுல் இஸ்ரா 30]

அல்லாஹ் மேலும் கூறுகின்றான்

{அல்லாஹ், தான் நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்.}.

[ஸூரதுல் பகரா 212]

உணவளிப்பவன்....

அனைத்து மனிதர்களும் ஏழைகளாகும் அவர்கள் அவனின் பக்கமும் அவனுடைய வாழ்வாதரத்தின் பக்கமும் தேவையுடைவன் ஆகும். மனிதர்கள் அனைவருக்கும் வாழ்வாதாரங்களை வழங்குகின்றான் அதில் தீயவர்களும் உள்ளடங்குகின்றனர். உலகில் ஆரம்பமானவர்களில் இருந்து கடைசியானவர்கல் வரைக்கும் உணவளிக்கின்றான்.

உணவளிப்பவன்....

நல்ல உள்ளத்துடன் யார் அல்லாஹ்விடம் முன்னோக்கி வாழ்வாதரத்தை தருமாறு கேட்கின்றாரோ. அவருடைய நல்ல உள்ளத்துக்காக அல்லாஹ் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்கின்றான். யார் அவனிடம் ஈமானைக் கொண்டும் அறிவைக் கொண்டும் கேட்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் பிற்படுத்தாமல் கொடுக்கின்றான். அவனுடைய நல்ல உள்ளத்திற்கு உதவி செய்யும் முகமாக அல்லாஹ் அவனுக்கு ஹலாலான உணவை வழங்குகின்றான். மேலும் யார் நல்ல மார்க்கத்துடன் கேட்கின்றானோ அவனுக்கும் வழங்குகின்றான்.

நிச்சியமாக அல்லாஹ் உணவளிப்பவன்....



Tags: