நிச்சியமாக அல்லாஹ் நுட்பமானவன்
{தீர்ப்பளிப்போரில் அல்லாஹ் மேலான தீர்ப்பளிப்பவன் இல்லையா?} [ஸூரதுத் தீன் 8]
நுட்பமானவன்
அல்லாஹ் தீர்ப்பளிப்பதில் கைதேர்ந்தவனாவான். அல்லாஹ் அவனுடைய சக்தியைக் கொண்டு எதை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் வைத்துள்ளான்.
நுட்பமானவன்
அல்லாஹ் மார்க்கத்தை நுட்பமான முறையில் கடமையாக்கியுள்ளான். மேலும் அதனுடைய சுன்னத்துக்களையும் நுட்பமான முறையில் ஆக்கியுள்ளான். அதை மார்க்கமாக்கியிருப்பதன் நோக்கத்திலும் அதனுடைய இரகசியங்களிலும் இம்மை மறுமையின் முடிவுகளிலும் ஒரு பாரிய நுட்பம் உள்ளது.
நுட்பமானவன்
அவன் நிர்னயிப்பதில் நுட்பமானவன். ஒரு ஏழை ஏழ்மையை நீக்குவதிலும் அல்லது ஒரு மனிதனின் நோய் பலவீனம் போன்றவையை நீக்குவதிலும் அல்லது சம்பாரிப்பதற்கு கஷ்டமான கடனாளியுடைய நெருக்கம் போன்ற இவை அனைத்தையும் போக்குவதில் அவன் நுட்பமானவன். அதே போன்று அவனுடைய பேச்சிலோ செயலிலோ எந்த விதமான குறைகளும் இருக்காது. அவன் தூய்மையானவனும் பெரிய ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
நுட்பமானவன்
ஒரு அடியானை அல்லாஹ்வுடைய ஞானம் அறிவு நிதானம் இரக்கம் போன்ற பண்புகள் கவர்ந்துவிடும். அவன் ஒவ்வொரு விடயங்களையும் அதற்குறிய சரியான இடத்தில் வைத்திருக்கின்றான்.
அல்லாஹ் தீர்ப்பளிப்பவர்களில் மேலான தீர்ப்பளிப்பவனாவான். அல்லாஹ்வுடைய அனுமதியின்றி இவ்வுலகில் எந்த விடயமும் நடக்காது. ஹலாலாக்குவதும் ஹராமாக்குவதும் அவனுடைய அதிகாரத்திலே உள்ளது. நுட்பம் என்பது மார்க்கமாக்கப்பட்டதாகும். எனவே மார்க்கம் என்பது சில விடயங்களை ஏவி சில விடயங்களை தடுத்ததுமாகும். அவனுடைய நுட்பத்திற்கு மாறாக எதுவுமில்லை. மேலும் அவனுடைய நிர்னயத்திற்கு எந்த மறுப்பும் இல்லை.
நுட்பமானவன்
ஒருவனும் அநியாயம் செய்யப்படமாட்டான்... அவனுடைய விடயங்களிலும் ஏவல்களிலும் தடுத்தல்களிலும் நீதியே காணப்படும்.
நிச்சியமாக அல்லாஹ் ஞானவாதிகளுக்கெள்ளாம் ஞானவாதியாக இருக்கின்றான்.
நுட்பமானவன் அல்லாஹ் அவனுடைய படைப்பினங்களின் விடயங்களில் உயர்ந்த நுட்பவாதியாக இருக்கின்றான். அவன் எந்த ஒரு படைப்பையும் வீணாக படைக்கவில்லை. மேலும் அவன் எந்த ஒரு விடயத்தையும் பிழையாக மார்க்கமாக்கவில்லை. ஆரம்பமோ கடைசியோ அவனுக்கே நுட்பம் இருக்கின்றது.