நிச்சியமாக அல்லாஹ் மிகைத்தவன்...
{அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்} [ஸூரதுல் அன்பால் 67]
அல்லாஹ் மிகைத்தவனும் பலமானவனுமாகும்
பலம்வாய்ந்து காணப்படுகின்ற எவரது பலமும் அவனுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. எதற்கும் சக்திவாய்ந்து இருக்கக்கூடிய எந்த சக்தியும் அவனை இயலாமல் ஆக்க முடியாது. அல்லாஹ் அனைத்தையும் விட உயர்ந்தவன்.
மிகைத்தவன்
அவனுடைய கண்ணியம் பூரணமடைந்துவிட்டது. ஏனையவர்கள் அவனுக்கு அடிபணிய வேண்டும். மேலும் அனைத்து பலமானவர்களும் அவனிடத்தில் பலகீனமானவர்களாகும். மேலும் ஏனையவர்கள் அனைவரும் அவனிடத்தில் அற்பமானவர்களாகும். அனைத்து படைப்பினங்களும் இழிவானதாகும்.
மிகைத்தவன்
அல்லாஹ் கண்ணியத்தை அவன் நாடியவர்களுக்கு வழங்குகின்றான். அவன் நாடியவர்களிடமிருந்து கலட்டி எடுக்கின்றான். சிலரை அவன் இழிவுபடுத்துகின்றான் அவனிடத்திலே நலவு இருக்கின்றது.
{ கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! } [ஸூரது யூனுஸ் 65]
வம்சத்தைக் கொண்டோ, சம்பாத்தியத்தைக் கொண்டோ செல்வத்தைக் கொண்டோ, காரணத்தைக் கொண்டோ கண்ணியம் இல்லை மாறாக கண்ணியம் அவனிடத்திலே உள்ளது.
மிகைத்தவன்
ஒருவனுடைய கண்ணியம் அல்லாஹ்வுடைய கண்ணியத்திலே உள்ளது. அவனுடைய அருளைக் கொண்டே பலம் உள்ளது. யாராவது பாதுகாப்பு தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடம் தேடட்டும் மேலும் யார் கண்ணியத்தை நாடுகின்றாரோ அவர் அல்லாஹ்வை உள்ளத்தால் முன்னோக்கட்டும்.
{அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதுவர்களுக்கும் மேலும் அவனை ஈமான் கொண்டவர்களுக்குமே கண்ணியம் என்பது உள்ளது.}. [ஸூரதுல் முனாபிகூன் 8]
நிச்சியமாக அல்லாஹ் மிகைத்தவன்
மிகைத்தவன் அனைத்திலும் அவனுக்கு கண்ணியம் உள்ளது. அவன் சக்தியிலும் தடுத்தளிலும் மிகைத்தவன் மேலும் அல்லாஹ் எல்லா விடயங்களிலும் மிகைத்தவன். அவனுடைய படைப்பினங்களில் ஏதாவது ஒன்று அவனின் பக்கம் சாய்ந்தால் தடுக்கமாட்டான். படைப்பினங்கள் அவனின் பக்கம் நெருங்கி அவனுடைய மகத்துவத்திற்கு கீழ்படியும்.