நிச்சியமாக அல்லாஹ் வெற்றியளிப்பவன்...
{அவன் தீர்ப்பளிப்பவன்; அறிந்தவன் என்றும் கூறுவீராக!} [ஸூரது ஸபா 26]
வெற்றியளிப்பவன்
எங்களுக்கு உன்னுடைய அருள்களை திறந்து தருவாயாக....
{மனிதர்களுக்காக அல்லாஹ் திறந்து விட்ட எந்த அருளையும் தடுப்பவன் எவனும் இல்லை} [ஸூரது பஃதிர் 2]
வெற்றியளிப்பவன்
அல்லாஹ் எங்களுக்கும் உங்களுக்கும் அருளை தந்திருக்கின்றான் மேலும் எங்களை அவனுடைய கொடையின்பாலும் சிறப்பின்பாலும் சாயவைத்துள்ளான். அவனுடைய கொடையையும் மன்னிப்பையும் எங்களுக்கு அதிகரித்துள்ளான்.
உள்ளங்களை நேர்வழி மற்றும் ஈமான் போன்றவைகளை விட்டும் மூடி வைத்தால் அல்லாஹ்வே அதை திறக்கக்கூடியவன்.
வெற்றியளிப்பவன்
அல்லாஹ் நலவுடைய வாசளைத் திறந்து அதை அவனுக்கு கொடுக்கின்றான். மேலும் அருட்கொடையே அவனுக்கு வழங்கி அதை அதிகரிக்கின்றான். அவர்களுடைய புத்தியினுடைய நுட்பம் மற்றும் அறிவு போன்றவையின் ஒளியைத் திறந்து அதை அழகுபடுத்துகின்றான். மேலும் அவனுடைய உள்ளத்தில் ஈமானைத் திறந்து அதனை நேர்வழி பெறச் செய்கின்றான்.
வெற்றியளிப்பவன்
அல்லாஹ் அவனுடைய அடியானை விட்டும் துக்கத்தை வெளியாக்குகின்றான், அனைத்து கவலைகளை விட்டும் பாதுகாக்கின்றான், அனைத்து துன்பங்களை விட்டும் தூய்மைப்படுத்துகின்றான், அனைத்து தீங்குகளையும் நீக்குகின்றான்.
வெற்றியளிப்பவன்
அல்லாஹ் மறுமையிலே அவனுடைய அடியார்களுக்கு மத்தியில் நீதியை நிலை நாட்டுவான். அவனே பொருப்பாளனும் புகழுக்குறியவனும் ஆவான்.
நிச்சியமாக அல்லாஹ் வெற்றியளிப்பவன்...
வெற்றியளிப்பவன்... அல்லாஹ் அவனுடைய அடியார்களுக்கு மார்க்கத்தில் ஏற்படுத்தியுள்ள சட்டத்தின் படி அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பான். அவனுடைய சட்டங்கள் ஏற்கனவே விதிக்கப்பட்டதாகும். மேலும் அவனுடைய கூலிக்கும் சட்டங்கள் உள்ளன. அவனுடைய இரக்கத்தைக் கொண்டு உண்மையாளர்களை நோக்கி வெற்றியளிப்பான். மேலும் அவனை அறிவதைக் கொண்டும் அவனுடைய இரக்கத்தைக் கொண்டும் அவனின் பக்கம் சாய்வதைக் கொண்டும் அவர்களுடைய உள்ளங்களை வெற்றியடையச் செய்வான். மேலும் அல்லாஹ் அவனுடைய அடியார்களின் அருட்கொடையினதும் பலதரப்பட்ட வாழ்வாதாரங்களினதும் கதவுகளை திறந்து வைப்பான்.