இரண்டாவது- மனிதர்களுக்கு இடையில் பொதுவான தாக்கம்

 இரண்டாவது- மனிதர்களுக்கு இடையில் பொதுவான தாக்கம்

இரண்டாவது- மனிதர்களுக்கு இடையில் பொதுவான தாக்கம்

அதே போன்று ஒரு முஃமீனின் உள்ளத்தில் ஈமானினதும் ஏகத்துவத்தினதும் தாக்கத்தை வெளிப்படுத்தும். மேலும் அவருடைய போக்கிலும், மக்களுடனான நற்குணங்களிலும் அதன் தாக்கத்தை வெளியாக்கும்.

நபியவர்கள் கூறினார்கள் «நிச்சியமாக நான் நற்செயல்களை பூர்த்தி செய்வதற்காகவே அனுப்பப்பட்டுள்ளேன், என்று கூறினார்கள்».(ஆதாரம் பைககி).

நபி (ஸல்) அவர்கள் ஈமானுக்கும் நற்செயல்களுக்கும் மத்தியில் இணைத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «முஃமீன்களில் பூரணமான ஈமான் உடையவன் அழகிய நற்குணம் உடையவனும் தனது குடும்பத்துடன் நல்ல முறையில் நடந்து கொள்பவனுமாவான்.» (ஆதாரம் திர்மிதி).

அல்லாஹ்வின் கண்கானிப்பில் இருக்கக்கூடிய ஒரு ஏகத்துவவாதி மேலும் அவனுடைய இபாதத்திலே மூழ்கி இருப்பவனாகவும் இருப்பான். அவருடைய வாழ்க்கையில் பலகோணங்களிலும் அவர் மக்களோடு அன்பாகவும் ஆதரவாகவும் நடந்து கொள்வார்.

குடும்பத்திலும் வீட்டிலும் ஏற்படுத்தும் தாக்கம்

1 பெற்றோர்களுடன் சிறந்த முறையில் நடந்துகொள்ளல்

பெற்றோர்களுடைய உரிமைகளை மேற்கொள்வதில் ஒரு ஏகத்துவவாதி மகத்துவமானவனாக இருப்பான். அல்லாஹ்வுடைய குர்ஆனிலே அவர்களுக்கிடையிலான உறவைக் கூறுகின்றான் {"என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!}.
[ஸூரதுல் இஸ்ரா 23-25],

அல்லாஹ் மேலும் கூறுகின்றான் { தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணைகற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.}.
[ஸூரதுல் அன்கபூத் 8].

2 குழந்தைகளுடன் நல்லமுறையில் நடந்து கொள்ளுதல்

நிச்சியமாக குழந்தைகள் உலகத்தின் கண்குழிர்ச்சியாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்

{செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும்.}[ஸூரதுல் கஹ்ஃப்],

நிச்சியமாக ஏகத்துவம் ஒரு முஃமீனுடைய உள்ளத்தில் அவர்களையும் அவர்களுடைய குழந்தைகளையும் வழர்ப்பதற்கு அழைக்கின்றது. மேலும் முஃமீன்களுடைய ஈமான்களைக் கொண்டு அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பதற்கும் அழைக்கின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் { நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.}.[ஸூரது அத்தஹ்ரீம் 6 ],

அவர்களுடைய வளர்புகளைப் பற்றி அவர்கள் கேட்கப்படுவார்கள்.

நபியவர்கள் கூறினார்கள் «நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்».(ஆதாரம் புகாரி).

3 மனைவியுடன் அழகான முறையில் நடந்து கொள்வது

ஒரு ஏகத்துவவாதி அவனுடைய மனைவியின் கடமையை நிறைவேற்ற வேண்டும். மனைவியுடைய விடயத்தில் அல்லாஹ் கண்கானிக்கின்றான் என்று பயந்துகொள்ள வேண்டும். மேலும் அவளுடைய கடமைகளை நிறைவேற்றுவதிலும் அவளை உபகாரம் செய்வதிலும் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் {பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.}.[ஸூரதுல் பகரா 228],

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «உங்களில் சிறந்தவர் உங்களுடைய குடும்பத்திற்கு சிறந்தவராகும். நான் எனது குடும்பத்திற்கு உங்களில் சிறந்தவனாவேன்.».(ஆதாரம் திர்மிதி).

சில பெண்கள் அவர்களுடைய கணவர்களை முறையிட்டவர்களாக ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.

நபியவர்கள் கூறினார்கள் «உங்களில் சிறந்தவர் உங்களுடைய மனைவிமார்களுக்கு சிறந்தவர்களாகும்.».(ஆதாரம் இப்னு மாஜா).

4 கனவனுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுதல்

ஏகத்துவத்தவம் ஒரு முஃமினான பெண்ணுடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பயத்தை விதைத்துள்ளது. அது அவளுடைய கனவனின் உரிமைகளை மேற்கொண்டு அவளுடைய இறைவனின் சுவர்க்கத்தை அடைந்து கொள்வதற்காகவுமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «ஒரு பெண் ஐவேலைத் தொழுகையை நிறைவேற்றுபளாகவும், நோன்பு நோற்கக்கூடியவளாகவும் , அவளுடைய கற்பை பாதுகாக்ககூடியவளாகவும் , அவளுடைய கனவனுக்கு வழிப்படக்கூடியவளாகவும் இருந்தால் அவளுக்கு நீ எந்த வாயிலாலாவது சுவர்க்கத்தில் நுளை என்று கூறப்படும்.»(ஆதாரம் அஹ்மத்)

அல்லாஹ் அவளுக்கு அவனுடைய சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்களை பொறுப்புச்சாட்ட வேண்டாம் என்று ஏவுகின்றான்.

அல்லாஹ் கூறிகின்றான் {வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும் அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான் சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான்.}.
[ஸூரதுத் தலாக் 7].

எந்தத் தேவையுமின்றி அவள் அவனிடம் விவாகரத்து கேட்கக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «யார் ஒரு பெண் எந்தக் காரணமும் இன்றி விவாகரத்து கேட்கின்றாலோ அல்லாஹ் அவளுக்கு சுவர்க்கத்தின் வாடையையும் தடை செய்கின்றான்.».( ஆதாரம் அஹ்மத்).

அண்டை வீட்டார்களுடனும் உறவினர்களுடனும் நல்ல முறையில் நடந்து கொள்ளுதல்.

இனபந்துக்களை சேர்ந்து நடப்பதும் மேலும் அண்டை வீட்டாரின் உரிமையும்.

ஒரு அடியான் தன்னை ஒருமைப்படுத்தி வணங்குவதற்கும் தன்னுடைய இரத்த பந்தங்கள் சொந்தக்காரர்கள் அண்டை வீட்டார்கள் போன்றோருடன் நடந்து கொள்ளும் விதத்துக்கு மத்தியிலும் ஒரு தொடர்பை ஏற்படுத்தியுள்ளான்.

அதை அல்லாஹ் கூறும் போது {அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும்உங்கள் அடிமைகளுக்கும்நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.}. [ஸூரதுன் நிஸா 36].

அல்லாஹ் மேலும் கூறுகின்றான் { உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர்.}. [ஸூரதுர் ரூம் 38],

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «யார் அல்லாஹ்வையும் மறுமையையும் ஈமான் கொண்டுள்ளாரோ அவர் அவருடைய அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்.».
(ஆதாரம் முஸ்லிம்).

மக்களுடனும் செயல்களிலும் ஏற்படுத்தும் தாக்கம்

அல்லாஹ்வை ஒருமைப்படுத்தும் ஒருவனுடைய உள்ளத்தில் ஈமான் நன்நடத்தைகளையும் மேலும் மக்களுக்கு உபதேசம் செய்வதையும் மேலும் அவர்களுடன் உண்மையாக இருப்பதையும் பிரயோசனமாகத் தரும். இது ஒரு முஃமினை அல்லாஹ்வை நெருங்க வைக்கும் சிறந்த செயல்களாகும்.

1 நற் குணங்கள்

அல்லாஹ் அவனுடைய நபியைப் பற்றி குறிப்பிடும் போது கூறுகின்றான் {நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.}[ஸூரதுல் கலம் 4].

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «சுவனத்தில் நுளைபவர்களில் அதிகமானவர்கள் யார் அல்லாஹ்வைப் பயப்படுகின்றாரோ அவரும் நன்நடத்தையில் இருப்பவர்களும் ஆவார்கள்.».(ஆதாரம் திர்மிதி).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான மனிதன் மற்ற மனிதர்களுக்கு பிரயோசனமாக இருப்பவர். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நற்செயல் இன்னொரு முஸ்லிமை சந்தோசப்படுத்துவதும் அவருடைய கஷ்டத்தை நீக்குவதும் கடனை நிறைவேற்றுவதும் அவருடைய பசியை நீக்குவதும் ஆகும். நான் எனது ஒரு சகோதரனுடைய தேவைக்கு செல்வது நான் மஸ்ஜிதுன் நபவியான இந்தப் பள்ளியில் ஒரு மாதம் இஃதிகாப் இருப்பதை விடவும் சிறந்ததாகும்.».(ஆதாரம் தபரானி).

2 உண்மை

அல்லாஹ் கூறுகின்றான் { நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!}.[ஸூரதுத் தவ்பா 119],

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

«நிச்சியமாக உண்மை நலவின் பக்கம் இட்டுச் செல்லும் நிச்சியமாக நலவு சுவர்க்கத்தின் பக்கம் இட்டுச் செல்லும் நிச்சியமாக அவன் உண்மையாளன் என்று ஆகும் வரைக்கும் அவன் உண்மை பேசுவான் மேலும் நிச்சியமாக பொய் தீயதின் பக்கம் இட்டுச் செல்லும் நிச்சியமாக தீயது நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லும் மேலும் நிச்சியமாக ஒரு மனிதன் அவன் பொய்யன் என்று ஆகும் வரைக்கும் அவன் பொய் பேசுவான்.».(ஆதாரம் புகாரி).

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

«நயவஞ்சகனின் அடையாளம் மூன்று- பேசினால் பொய் பேசுவன் மேலும் வாக்குருதியளித்தால் மாறு செய்வான் நம்பினால் மோசடி செய்வான்.».(ஆதாரம் புகாரி).

3 உபதேசம் செய்வதும் மேலும் மோசடி செய்யாமல் இருப்பதும்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் «அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்து போனால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை».(ஆதாரம் முஸ்லிம்).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் "உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இதில் மழைச்சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அப்போது அவர்கள், "ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டுவிட்டு, "மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள்.

«இவ் உணவின் சொந்தக்காரரே! இது என்ன? அதற்கவர், அல்லாஹ்வின் தூதரே, மழை பெய்துவிட்டது என்றார். அதற்கு நபியவர்கள், இவற்றை மக்கள் பார்ப்பதற்காக மேலால் வைத்திரக்கலாமே. யார் ஏமாற்றுகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல»
(ஆதாரம் முஸ்லிம்).

நபியவர்கள் பற்றி தீய எண்ணம் வைப்பதற்கு அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன. அவர் மனிதர்களுக்கு ஏகத்துவத்தை கற்றுக்கொடுக்காமல் சுத்தம் செய்வதைப் பற்றி கற்றுக்கொடுத்துள்ளார்கள் என்ற தீய எண்ணங்கள் உள்ளன. ஆனால் நபியவர்கள் கூறிய ஏகத்துவம் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை என்று கூறும்வரை நான் மக்களுடன் போராடுமாறு ஏவப்பட்டுள்ளேன் எந்பதாகும். (ஆதாரம் புகாரி). யார் அவருடைய செல்வத்தையும் இரத்தத்தையும் பாதுகாத்துக் கொள்வாரோ அவரே உண்மையான ஏகத்துவவாதியாகும்.

இமாம் மாலிக் இப்னு அனஸ்



Tags: