அல்லாஹ் அவன் மிகவும் அறிந்தவன் உள்ளூர அறிபவன் மேலும் சூழ்ந்து கொள்ளக்கூடியவன்...
மிகவும் அறிந்தவன் உள்ளூர அறிபவன், சூழ்ந்து கொள்ளக்கூடியவன்
அவனுடைய அறிவு வெளிரங்கமானவற்றையும் மறைமுகமானவற்றையும் , பகிரங்கமானவைகளையும் இரகசியமானவைகளையும், கயமையானதையும், ஆகுமானதையும், இடம்பாடாக்கிக்கொண்டவைகளையும் அவனுடைய அறிவு சூழ்ந்துள்ளது. மேலும் உயர்ந்த மற்றும் தாழ்ந்த இறந்தகால நிகழ்கால மற்றும் எதிர்கால விடயங்களையும் அவன் அறிந்தவன். விடயங்களில் எந்த விடயமும் அவனுக்கு மறையாது.
அவன் அறிந்தவனாகவும் உள்ளுணர்வு உடையவனாகவும் இருக்கின்றான்.
{யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.} [ஸூரது லுக்மான் 34]
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும் சூழ்ந்தவனாகவும் இருக்கின்றான்.
{வானங்களிலும்பூமியிலும் உள்ளதை அவன் அறிவான். நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.}.[ஸூரா அத்தகாபுன் 4]
அவன் அனைத்தையும் மிக அறிந்தவனாக இருக்கின்றான்...
{அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், ஒவ்வொரு பொருளையும் அறிவால் அல்லாஹ் சூழ்ந்து விட்டான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அல்லாஹ்வே ஏழு வானங்களையும் பூமியில் அது போன்றதையும் படைத்தான்.அவற்றுக்கிடையே கட்டளைகள் இறங்குகின்றன.}. [ஸூரதுத் தலாக் 12]
அல்லாஹ் மேலும் கூறுகின்றான்
{ஒவ்வொரு பொருளையும் அறிவால் அல்லாஹ் சூழ்ந்து விட்டான் }
[ஸூரதுத் தலாக் 12]
அல்லாஹ் அவன் மிகவும் அறிந்தவன் அவன் உள்ளூர அறிபவன் மேலும் சூழ்ந்து கொள்ளக்கூடியவன்