நிச்சியமாக அல்லாஹ் மன்னிக்ககூடியவன் பிழைபொருப்பவன்...
{அல்லாஹ் மன்னிப்பவன்; பிழை பொறுப்பவன்.}. [ஸூரதுல் ஹஜ் 60]
அல்லாஹ் மன்னிக்ககூடியவன் பிழைபொருப்பவன்
மன்னிப்பைக் கொண்டு நல்ல விடயங்களில் தொடர்ந்தும் இருப்பான். அவனுடைய அடியார்களுக்கான மன்னிப்பைக் கொண்டு அவன் வர்ணிக்கப்பட்டுள்ளான். ஒவ்வொறுவரும் அவனுடைய மன்னிப்பின் பக்கமும் பிழைபொருப்பின் பக்கமும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். மேலும் அவனுடைய அருளின் பக்கமும் கொடையின் பக்கமும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
மன்னிப்பதற்கான காரணங்களைக்கொண்டு யார் அவனிடம் வருகின்றானோ அவனை மன்னித்து பிழை பொருப்பதாக வாக்களித்திருப்பவனே
அல்லாஹ் கூறுகின்றான்
{திருந்தி, நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்து, பின்னர் நேர்வழி பெற்றவரை நான் மன்னிப்பேன்.}. [ஸூரது தாஹா 82]
மன்னிக்கூடியவனே நாம் உன்னிடம் தூய்மையான பாவ மன்னிப்பை கேட்கின்றோம். அதனைக் கொண்டு பாவங்கள் கலட்டியெடுக்கப்பட வேண்டும். மேலும் நாம் அதிலிருந்து விடுபட வேண்டும். நாம் உனக்கு மாறு செய்வதையும் பிழை செய்ததையும் இட்டு கைசேதப்படுகின்றோம். மேலும் உனக்கு மாறு செய்வதை விட்டுவிட்டு உனக்கு வழிப்படுவதை உறுதி கொள்கின்றோம். மன்னிக்ககூடியவனே நீ எங்களை மன்னித்து விடு.
அல்லாஹ்வே நீ மன்னிப்பை விரும்பி மன்னிக்ககூடியவன் எங்களை மன்னித்து விடுவாயாக..... அல்லாஹ்வே நீ மன்னிக்ககூடியவனும் இரக்கமானவனும் ஆவாய் என்பதை எங்களுக்கு அறிவித்து தருவாயாக........
{ "நான் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்பதை எனது அடியார்களுக்குக் கூறுவீராக!} [ஸூரதுல் ஹிஜ்ர் 49]
மன்னிக்ககூடியவனே எங்களுக்கு அருள் புரிந்து எங்களை மன்னிப்பாயாக.
நிச்சியமாக அல்லாஹ் மன்னிக்ககூடியவன் பிழைபொருப்பவன்...