அல்லாஹ்விடத்தில் அமல்களில் சிறந்ததும் தூய்மையானதும் ஈமானாகும்.
அபூ தர் (ரழி) அவர்கள் ரஸூலுல்லாஹ்விடம் கேள்வி கேட்டார்கள்
«ரஸூலுல்லாஹ்வே அமல்களில் சிறந்தது எது? நபியவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்வதும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதுமாகும்» (ஆதாரம் முஸ்லிம்).
இது இம்மை மறுமையினுடைய நேர் வழியும் மற்றும் சந்தோசத்தின் காரணங்களுமாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்
{ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான்}[ஸூரது அல் அன்ஆம் 125].
தீய விடயங்களை விட்டும் ஒரு முஃமினை ஈமான் பாதுகாக்கும்.
{(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள்}
[ஸூரது அல் அஃராப் 201].
அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளில் ஈமானும் ஒன்றாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்
{" நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நட்டமடைந்தவராவீர்என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது}[ஸூரதுல் ஸுமர் 65].
தூய்மையான ஈமானுடையவரை அல்லாஹ் அருள் பாலிக்கின்றான். மேலும் அவனுடைய துஆவை ஏற்றுக்கொள்கின்றான்.
{"நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும் நீர் நட்டமடைந்தவராவீர்என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது}[ஸூரதுல் ஸுமர் 65].
தூய்மையான ஈமானுடையவரை அல்லாஹ் அருள் பாலிக்கின்றான். மேலும் அவனுடைய துஆவை ஏற்றுக்கொள்கின்றான்
அல்லாஹ் கூறுகின்றான்
{நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது. தனது இறைவனின் விருப்பப்படி ஒவ்வொரு நேரமும் தனது உணவை அது வழங்குகிறது}
[ஸூரது இப்ராஹிம் 24-25].
ஈமானின் பலன்களை கீழே தருகிறோம்
1.உன்மையான ஈமான் அமைதியையும் உடல் சுகத்தையும் மேலும் உள்ளத்தையும் விரிவுபடுத்துகின்றது அல்லாஹ் கூறுகின்றான்
{கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்} [ஸூரது யூனுஸ் 62].
2.அல்லாஹ்விடமிருந்து முஃமீன்களுக்கு குறிப்பான ஒரு வாய்ப்பு கிடைக்கின்றது. அதாவது நிராகரிப்பு எனும் இருழிலிருந்து வெளியேருகிறார்கள் மேலும் ஈமான் எனும் ஒழியைப் பின்பற்றி அதன் கூலியையும் பெற்றுக் கொள்கின்றனர்.
3.அல்லாஹ்வின் பொருத்தத்திலும் மேலும் யார் ஈமான் கொண்டு அதை உண்மைப்படுத்தினாரோ அவருக்கு தயார்ப்படுத்தப்பட்ட சுவர்க்கத்தில்தான் வெற்றி உள்ளது.
{நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது}[ஸூரது அத்தவ்பா 72].
4.அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களையும் அவனுடைய படையையும் அவனுடைய நேசர்களையும் விட்டு ஆபத்துகளை தடுத்து நிறுத்துகின்றான்
{நம்பிக்கை கொண்டோரை விட்டும் (துரோகத்தை) அல்லாஹ் தடுத்து நிறுத்துகிறான்} [ஸூரது ஹஜ் 38].
அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்வதானது பலவீனமானவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்தும். ஆகவே பலசாலிக்கு அவனது ஈமானின் மூலமாக அவனது பலம் அதிகரிக்கின்றது.
அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்வதானது பலவீனமானவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்தும். ஆகவே பலசாலிக்கு அவனது ஈமானின் மூலமாக அவனது பலம் அதிகரிக்கின்றது.5.உலகத்திலே உயர்வும் தலைமைத்துவமும்
உலகத்திலே உயர்வும் தலைமைத்துவமும்
அல்லாஹ் கூறுகின்றான்: {அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்த போது நமது கட்டளைப்படி வழிகாட்டும் தலைவர்களை அவர்களிலிருந்து ஏற்படுத்தினோம்}
[ஸூரது ஸஜ்தா 24].
இவர்கள்தான் மார்க்க மேதைகள் அவர்கள் அல்லாஹ்வை நம்பி இருந்தார்கள். அல்லாஹ் அவர்களைப் பற்றி கூறிக்கொண்டே இருக்கிறான். அவர்கள்தான் சிறந்த சமுதாயமாக அவர்களுடைய அடிச்சுவடுகளை பதியவிட்டுச் சென்றார்கள். அவர்களுக்கு கண் விளங்கவில்லை. ஆனாலும் அவர்களுடைய தகவல்களும் தாக்கங்களும் இந்த சமுதாயத்தில் இருக்கின்றன.
6.முஃமீன்களுடனான அல்லாஹ்வின் இரக்கம்
அல்லாஹ் கூறுகின்றான் {அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்.} [ஸூரதுல் மாஇதா 54].
மேலும் கூறுகின்றான் {நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரிடம் அளவற்ற அருளாளன் அன்பு செலுத்துவான்.} [ஸூரது மர்யம் 96].
ஈமான் இல்லாத வாழ்க்கை தவிர்க்க முடியாத மரணமாகும் ஈமான் இல்லாத கண் விழி குருடைப்போல ஈமான் இல்லாத நாவு முடக்கைப் போல ஈமான் இல்லாத கை சொத்தியைப் போல7.வீடுகளிலே முறையான வாழ்க்கை வாழ்வது
அல்லாஹ் கூறுகின்றான்
{ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.}[ஸூரதுன் நஹ்ல் 97].
சந்தோசமான மற்றும் முறையான வாழ்க்கையை தேடக்கூடியவர்கள் எங்கே?!!
8.முஃமீன்கள் மீது அல்லாஹ்வின் இரக்கமும் அல்லாஹ்வின் மீது முஃமீன்களின் இரக்கமும்.
{அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்.}[ஸூரது அல் மாஇதா 54].
அதாவது அல்லாஹ் அவர்களை விரும்புவான் மேலும் மக்களுக்கு மத்தியிலும் அவர்களை விரும்பப்படக்கூடியவர்களாகவும் ஆக்குவான்.
9.ஈமானுடையவர்களுக்கு அல்லாஹ்வுடைய கண்ணியத்தின் மூலம் நற்செய்தி வரும்.
அல்லாஹ் கூறுகின்றான்
{நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!} [ஸூரது தவ்பா 112].
நற்செய்தி மகத்துவமானதாக ஆகிவிடும் மேலும் அதன் தாக்கம் உடம்பிலே வெளிப்படும். இதனாலே நற்செய்தி என்று பெயர் சொல்லப்படுகின்றது. அல்லாஹ்வுடைய அருளிலோ அவனுடைய பொருத்தத்திலோ அவனுடைய சுவர்க்கத்திலோ மகத்துவமில்லை.
அல்லாஹ் கூறுகின்றான்
{"நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன'' என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.}[ஸூரது அல் பகரா 25].
10.ஈமான் மனிதன் உறுதியாக இருப்பதற்கு காரணமாக உள்ளது
அல்லாஹ் கூறுகின்றான்.
{"மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. "எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்.}[ஆலு இம்ரான் 173].
இவ்வாறான உறுதிப்பாடுகள்தான் நபிமார்கள் ஸஹாபாக்கள் தாபிஈன்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றலில் வந்தவர்களினதும் அர்ப்பணிப்புகளையே வரலாராகக் கொள்ளப்படுகின்றது.
11.சொற்பொழிவைக்கொண்டு பிரயோசனம் பெறுதல்.
அல்லாஹ் கூறுகின்றான்
{அறிவுரை கூறுவீராக! அந்த அறிவுரை நம்பிக்கை கொண்டோருக்குப் பயன் தரும்.}[ஸூரது அத்தாரியாத்].
ஈமான் உள்ளவர்களுக்கே சொற்பொழிவும் நினைவுபடுத்துதலும் பிரயோசனமலிக்கும்
12.கஷ்டமான நிலமையிலும் விரிவான நிலமையிலும் அல்லாஹ் அனைத்து நிலமைளிலும் நலவையே ஆக்கியுள்ளான்.
«ஒரு முஃமினுடைய விடயம் ஆச்சிரியமாக உள்ளது அவனுடைய அனைத்து விடயங்களும் அவனுக்கு நலவாகவே அமைகின்றன இது முஃமினைத் தவிர வேறு யாருக்கும் ஏற்படாது. அவனுக்கு ஏதாவது சந்தோசமூட்டக்கூடிய விடயம் நடந்தால் அவன் அதற்கு நன்றி செலுத்துவான். அது அவனுக்கு நலவாக அமைந்து விடும். மேலும் அவனுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால் அதில் அவன் பொருமையாக இருப்பான். அது அவனுக்கு நலவாக அமையும்.»
(ஆதாரம் முஸ்லிம்).
ஈமான் அதனுடைய தோழனை கஷ்டத்திலே பொருமையையும் மேலும் சந்தோசமான நிலமைகளில் நன்றி செலுத்தக்கூடியவர்களாகவும் ஆக்கியுள்ளது.
13.ஒரு முஃமின் பெரிய பாவத்தில் விழுவதைவிட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளான்.
நபியவர்கள் கூறினார்கள்-
«ஒரு விபச்சாரி அவன் ஈமான் கொண்ட நிலமையில் விபாச்சாரம் செய்யமாட்டான்.»
(ஆதாரம்- புகாரி).
இது ஈமானுக்காக வழங்கப்படும் ஒரு மகத்துவமான கூலியாகும். மன நிம்மதியையும் அமைதியையும் சந்தோஷத்தையும் தேடுபவர்கள் எங்கே?